Walk: திராவிட இயக்க இதழியல் – வரலாற்று நடை – Aug. 24, 2019

பேசி வளர்ந்த இயக்கம் என்று திராவிட இயக்கத்தின் மீதொரு பார்வை உண்டு. அது பாராட்டோ, விமர்சனமோ… உண்மையில் பேசியும், பேச வைத்தும், எழுதியும் எழுத வைத்தும் வளர்ந்த இயக்கம் தான் திராவிட இயக்கம். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் நடத்திய Justice என்ற ஏட்டின் பெயரால் தான் அவ்வியக்கமே மக்களால் Justice Party என்று வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா தொடங்கி திராவிட இயக்கத்திலிருந்து ஏராளமானோர் இதழ்கள் நடத்தினர். சென்னையின் வரலாற்றிலும், வளர்ச்சியிலும் திராவிட இயக்கங்களைப் போலவே, திராவிட இயக்க இதழ்களுக்கும் ஒரு பங்கு உண்டு. அவற்றில் சில இடங்களையும், சில தடங்களையும் காணும் வாய்ப்பை உருவாக்குகிறது இந்த நடை.

வழிநடத்துபவர்: இதழாளர் கோவி.லெனின்
நாள்: 24.08.2019 சனிக்கிழமை காலை 6 மணி கட்டணம்: ரூபாய் 500
கூடுமிடம்: தினத்தந்தி அலுவலகம் அருகில், EVK சம்பத் சாலை, சென்னை-7
தொடர்புக்கு :99404 89230